Monday, June 23, 2008

Movie Review- Dasavatharam

தசாவதாரம் படத்தை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நான் பார்த்தேன். அப்படத்தை பற்றி என்ன சொல்வது... ஒரு வரியில் சொல்லணும் என்றால் அப்படம் உருவாக்கிய எதிர்பார்புக்களை அடைந்தும் அடையாமலும் இருந்தது.
புரியவில்லையா
? அப்படத்தின் சில தருணங்கள் மிக நன்றக வடிவமைக்க பட்டிருந்தது , உதாரனத்துக்கு கமலின் ஜப்பானியர் வேடம், அமெரிக்கன் Fletcher இன் வேடம் மற்றும் பாட்டியின் வேடங்கள் மிக நன்றாக இருந்தன. ஆனால் கதையில் சில கதாபாத்திரங்களை கமலுக்கு பத்து வேடங்கள் வேண்டும் என்பதற்காகவே உருவாக்கியது போல் இருந்தந்து. உதாரனத்துக்கு George Bush, மற்றும் இஸ்லாமியரக ஒரு வேடம். இதற்கும் மேலாக, சில இடங்களில் கமலின் அமெரிக்க வேடங்களின் make up, முகத்தில் மைதா மாவை பூசியது போல் இருந்தது.
உலகின் மிக பேச பட்ட மற்றும் விவாதிக்கப்பட்ட Chaos theory யை அஸ்திவாரமாக கொண்டுள்ளது இந்த படம். உலகத்தின் ஒரு பகுதியில் அசையும் ஒரு சிறு பட்டாம்பூச்சியின் சிறகுகளால் உலகின் இன்னொரு பகுதியில் பூகம்பம் வரலாம், என்று கூறுகிறது இந்த theory. அதே பாதையில், கூட ஆன்மீகத்தையும் கலந்து வழங்கியிருக்கிறார் ரவிக்குமார். 12 அம் நூற்றாண்டில் நடந்த ஒரு சமபாவம் எப்படி 21 அம் நூற்றாண்டை பாதிக்கும் என்று சொல்ல முயற்சித்திருக்கிறார். (இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவில்லை-- 12 அம் நூற்றாண்டில் நடந்த அந்த சம்பவம் எப்படி இக்கதையில் பொருந்துகிறது?)
அசினின் கதாபாத்திரம் .... சொல்வதுற்கு வார்த்தைகளே இல்லை... இக்காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா? நம்ப முடியவில்லை ரவிக்குமார். இன்னொரு முக்கியமான ஒரு விஷயம், கமல் கண்டுபிடித்துள்ள அந்த virus ஐ NaCl கொண்டு அழிக்க முடியும் என்று கமல் படத்தின் நடுவில் கூறுகிறார், ஆனால் படத்தின் கடைசி பாத்து வினாடிகளில் தான் NaCl என்றால் உப்பு என்று உணருகிறான் கமல். இது நம்மூரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு கூட தெரியுமே.

ஆனால், படம் எனக்கு பிடிதிரிந்தது கொஞ்சம் நம்பிக்கையின் எல்லையை சோதிப்பதாக இருந்தாலும், நன்றகவே இருந்தது. படம் முழுக்க அடுத்து என்ன செய்வார்கள், எல்லா சம்பவங்களையும் எப்படி ஒன்றாக கோர்பார்கள் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம். அதற்குமேல் பார்க்கணும் என்றால் நீர் ஒரு தீவிர கமல் ரசிகனாக இருந்தால் மட்டுமே முடியும்.

செந்தில் கண்ணன்

5 comments:

Unknown said...

no Google Transalation for Tamil-Enligsh !

Senthil Kannan said...

eh? i did not use google translate.... this blog just translates the phonetic sound of an english word into tamil script... eg... if i type "Senthil" in english, with this option enabled, it changes the word into the tamil scrip, like you see at the bottom of my post.... i know my language well enough bro.. :D

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

i meant, i dont have a translator to read the post back to me !
('lost in translation' my previous post! hahaha)

Senthil Kannan said...

ada paavi.. i thought you knew to read tamil...